வரலாற்றில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ள UNP

நா
டு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் குறைவான வாக்கு வீதத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாவதாக வெளியான காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி 3.96 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது.

 காலி மாவட்டம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றிய வஜிர அபேவர்தன பிரதிநித்துவப்படுத்தும் மாவட்டமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டணியின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவது அந்த கட்சி தீர்மானித்திருந்ததுடன் அந்த கூட்டணியின் தீர்மானிக்கும் அதிகாரத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ரணில் விக்ரமசிங்க அணியினர் விரும்பவில்லை என்பதால், சஜித், ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகித்த ஏனைய சிறிய கட்சித் தலைவர்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிட்டார்.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரபலமான பிரதித் தலைவர் மற்றும் அவரது வாக்கு வங்கியை இழந்ததன் பிரதிபலன் தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக புலப்பட்டு வருகிறது.
ரஜீஸ் முகம்மட் பாயிஸ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :