தமிழரசின் தேசியப்பட்டியல் அம்பாறைக்கு- வாலிபமுன்னணி துணைச்செயலாளர் நிதான்சன்.

காரைதீவு சகா-

வடகிழக்கில் அம்பாறை மாவட்டம் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது.கடந்தகாலங்களில் பலவிதமான புறக்கணிப்புகளுக்கும் பாரபட்சங்களுக்கும் உட்பட்ட 52தமிழ்க்கிராமங்களைக் கொண்ட அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அவசியம் வழங்கப்படவேண்டும்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்.சட்டமானி அ.நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் இல்லாமைக்கு தேசிய கட்சியின் கைக்கூலிகள் காரணமாக இருக்கலாம் .ஆனாலும் அம்பாறை உட்பட கிழக்கில் பின்னடவை சந்திக்க காரணம் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு நடக்காமையே பிரதான காரணமாகும்.
பிரதேச செயலகம் பெற்றுத் தராதவர்கள் சமஷ்டி தீர்வு பெற்று தருவார்களா? எனும் பிரச்சினை நிலவுகின்றது.கட்சியின் இருப்பையும் மக்களின் காணிகள்இ இருப்பு காப்பாற்றபட வேண்டுமாயின் அம்பாறைக்கு தேசிய பட்டியல் அவசியமாகிறது.

அதனை தலைமை சிந்தித்து நல்ல முடிவெடுக்கும் என நம்பிக்கை உள்ளது.ஆனாலும் கட்சியால் அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கபடுமாயின் நிச்சயமாக வடகிழக்கு தாயக பூமியில் அம்பாறை விலக்களிக்கப்பட்ட மாவட்டமாக மாறும்.
பிரதேச செயலகம் தரமுயர்வு நடைபெறவில்லை என கொந்தளித்து காட்டிய அதிருப்தி வெளிப்பாடானது தேசிய பட்டியலும் வழங்கபடவில்லையாயின் உச்சத்தை தொடும்.

கட்சி தமிழ் மக்களின் இருப்பையும் அம்பாறையையின் இருப்பையும் காப்பாற்ற இல்லையாயின் தமிழரை யாரும் காக்க முடியாது என சிந்தித்து கட்சியால் எந்தவொரு தமிழ் பிரதிநிதியும் இல்லாத 116000மேற்பட்ட மக்களையும் புறக்கணித்தது என யாரும் சொல்லாத அளவுக்கு கட்சி தன்மானத்தை இழக்காது அம்பாறைக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :