நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பாஸ் குழுவின் ஏற்பாட்டில் இன்று(17) சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முற்றலில் துஆ பிரார்த்தனையுடனும் பொல்லடி உள்ளிட்ட நிகழ்வுடன் மக்களால் பிரமாண்டமான முறையில் வரவேற்கப்பட்டு சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும் பறக்கவிடப்பட்டு வெற்றி நாயகனை கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இப் பிரமாண்டமான நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு நடந்து முடித்த தேர்தலில் கல்முனை தொகுதியில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும்,தனக்கும் வழங்கி வெற்றி பெற செய்த சாய்ந்தமருது மக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம் பஸ்மீர்,எம்.எச்.எம்.இஸ்மாயில், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்தீன் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிவு அவர்களின் செயலாளர்களான எம்.ஏ.எம்.இன்சாட்,ஏ.எம் இன்சாத்,சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எப்.எம்.தில்சாத் உள்ளிட்ட கட்சியின் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment