நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று(10)ஆரம்பமாகின.
பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 4ஆம் திகதி முதல் முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொதுத் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து சுகாதார நடை முறைகளை பேணி பாடசாலை வருகை தந்ததோடு,மாணவர்கள் கைகளை சுத்தம் செய்து வெப்பமாணி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு பாடசாலையினுள் சென்றதையும் காணக்கூடியதாகவுள்ளது.
0 comments :
Post a Comment