கொழும்பு முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை முஸ்லீம் சம்மேளனத்துடன் கொண்டாடினார்கள்


சில்மியா யூசுப்-
கொழும்பு முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை முஸ்லீம் சம்மேளனத்துடன் கொண்டாடினார்கள்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியபட்டியலுக்கு தெரிவு செய்தமையை இட்டு கொழும்பு நகர முஸ்லிம் பகுதிகளில் வெற்றி கொண்டாட்டங்களில் விருந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.உவைஸ் ஹாஜியாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி வெற்றி கொண்டாட்டங்களை கேசல்வத்த, அலுத்கடை, மாலிகாவத்தை, கொலன்னாவை, மோதரை மற்றும் கிராண்ட்பாஸ் போன்ற பகுதிகளுக்கு சென்று பங்குபற்றினார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி கொண்டாத்தில் அப்பகுதி முஸ்லிம்களுக்கு பாற்சோறு மற்றும் பிற சிற்றுண்டிகளை வழங்கியதோடு மக்கள் மிக சந்தோசத்துடன் கொளரவித்து புதிய அரசாங்கத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முஸ்லிம்களின் பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்றும், அதையடுத்து மூன்று முஸ்லிம்களை தேசிய பட்டியலில் ஜனாதிபதி அவர்கள் நியமித்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :