ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு; 83,398 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ரவூப் ஹக்கீம், தமக்கு முதலிடத்தைப் பெறுவற்கு உதவிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், குருநாகல், வன்னி, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினூடாக போட்டியிட்ட தமது கட்சி சார்பான வேட்பாளர்களை ஆதரித்தவர்களுக்கும் அவர் தமது நன்றிகள் உரித்தாகட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment