திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்.எஸ்.தௌபீக்கிற்கான வரவேற்பு நிகழ்வு இன்று(7) கந்தளாயில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டி இட்டு 43,759 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
கந்தளாய் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து அமோக வரவேற்பளித்து வாழ்த்துகளை கந்தளாய் மக்கள் தெரிவித்துக்கொண்டனர்.
இதன் போது பாராளுமன்ற உரையாற்றுகையில்:இது என்னுடைய வெற்றியல்ல உங்களுடையது நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பின் பேரில் நான் பாராளுமன்றம் செல்கின்றேன்.
எனது சேவை வாக்களித்தவர்கள் வாக்களியாதவர்கள் என்று பாராது சேவை செய்வேன்,மாவட்டத்தில் என்னால் இயன்றளவு சேவைகள் செய்வேன்,இளைஞர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் என்றார்.
0 comments :
Post a Comment