பிரதமரின் ஊடகப் பிரிவு போதும் நீங்கள் வேண்டாம் -அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்!

ஜே.எப்.காமிலா பேகம்-


டகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்காத பாதுகாப்பு அதிகாரிகள், பிரதமரின் ஊடகப் பிரிவு போதுமானது என்றும் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதியமைச்சராக கடந்த வாரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதற்கமைய கொழும்பிலுள்ள நிதியமைச்சில் இன்றைய தினம் தனது கடமைகளை சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் சுவ வேளையில் ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வுக்கு வெகுசன ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பிற்கு அமைய ஊடகவியலாளர்கள் அந்த நிகழ்வில் செய்தி சேகரிப்பு, ஒளிபரப்பு செய்வதற்காக சென்றிருந்தனர்.

எனினும் பிரதான நுழைவாயில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அந்த நிகழ்வுக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

ஊடகவியலளார்களை இடைமறித்த பாதுகாப்பு அதிகாரிகள், பிரதமரின் ஊடகப் பிரிவு இந்த நிகழ்வில் செய்திகளை வழங்க போதுமானதாக உள்ளது என்றும் பதிலளித்துள்ளனர்.

இதேவேளை, நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சினையும் பெற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடமைகளை பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் இன்று ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வுக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :