உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்துவருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறது.
இதன்படி வரும் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டம்.ஒழுங்கு அமைச்சருமான சாகல ரத்நாயக்கவுக்கும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆஜராகும்படி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment