இன்றைய தேர்தல் வாக்களிப்பில் எதிர்பார்த்ததைவிட மக்கள் மிகவும் ஆர்வமாக, நேரகாலத்தோடு சென்று வாக்களிதத்தை காணக்கூடியதாக இருந்தது. மேலும் மக்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் வாக்குகளை அளித்துள்ளனர் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நடைபெறும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிச்சயம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐம்பதாயிரத்திக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வெற்றி கொள்ளும்.
முஸ்லிம்களுடைய உரிமைகளை வென்று, அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவும் அதிகாரத்தை பெறுவதற்காகவும் எந்தக் கட்சி அதிக கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புடன் காணப்படுகிறதோ அந்தக் கட்சியுடன் பேரம்பேசி அரசாங்கத்துடன் ஆட்சியை நிர்ணயிக்கும் கட்சியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்.
இது மக்களுக்கு நாங்கள் சேவைகளைச் செய்ய வேண்டிய ஒரு தருணம். அது மாத்திரமில்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக மூன்று ஆசனங்களைப் பெறும்.
அவ்வாறு பெறும் பட்சத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வாறு எங்களுடைய மாகாண சபை ஆட்சிக் காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடன் சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்காக செயற்பட்டதோ, அதேபோன்ற செயலை பாராளுமன்றத்திலும் புரிந்துணர்வுகளோடு இரு கட்சிகளும் செயற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment