அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவரும், முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் திடீர் சுகவீனமுற்று திருச்சி தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து கவலையடைவதோடு அவர் விரைவில் சுகமடைவதற்கு இறைவனை பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும், இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு மாநிலங்களிலும், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற பேராசிரியர் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் சிறப்பிற்கும் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக அவருடனும் அவரது அமைப்பினருடனும் உன்னதமான நட்புறவை பேணிவருகின்ற நிலையில் அன்னார் இறைவனின் திருப்தியை பெற்று, இன்னும் நீண்ட காலம் வாழவேண்டும் என தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் பிரார்த்திப்பதாகவும், இன்று இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்ற வேளையில், முழுமையாக அதில் ஈடுபாடு கொண்டுள்ள நிலையிலும் பேராசிரியர் மீதுள்ள பற்றின் காரணமாக இந்தச் செய்தியை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment