தலவாக்கலை பி.கேதீஸ்-
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஊடாக ரதெல்ல வரைச் செல்லும் பிரதான வீதியில் வங்கி ஓயாவிற்கும் கல்கந்தவத்தைக்கும் இடையிலான பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் வீதி பாரிய நில வெடிப்புடன் நிலம் தாழிறங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்நிலைமை ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் தலவாக்கலை நகருக்கு இவ்வீதி வழியாக செல்லும் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.மேலும் இவ்வீதி வழியாக தலவாக்கலை நகர பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், இதர தொழில்துறைகளுக்கு செல்லுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment