சிகரங்களைத் தகர்த்து ஆளுமைமிக்க சாதனை-ஹாபிஸ் நஸிருக்கு பாராட்டு..

ஏறாவூர் சாதிக்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடையாளம் இம்முறையும் நிலைப்படுத்தப் பட்டு ள்ளது. இந்தப் பெருமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தொடர்ந்தும் கிடைத்து வருகின்றமை கவனிக்கத்தக்கது. இம்முறை இந்த வெற்றியை பெற்றுதந்த ஹாபிஸ் நஸிரை பாராட்டவேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கும் கருத்துருவாக்கம் ஒன்றை தருகின்றார்கள் எழுத்தாளர் முஹமட் அவர்களும் ஏறாவூர் பிரதேசவாசிகளும்

அதில ;மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏன் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்? இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவு செய்தது. இவ்விரு முறை களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வியூகம் வெல்லப்பட்டமை எவ்வாறு? கட்சித் தலைமையின் ஆளுமையா? அல்லது வேட்பா ளர்களின் தனிப்பட்ட செல்வாக்குகளா? இவற்றை ஆராய்வதில்தான், இதற்கு விடையும் கிடைக்கும்.

இம்மாவட்டத்தில் இம்முறை போட்டியிட்ட அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீரின் வெற்றியை உண்மையில் தனிப்பட்ட சாதனையாகத்தான் கருத வேண்டியுள்ளது. எனினும், கட்சி இவருக்கு வழங்கிய பதவிகள், இவரின் ஆளுமையின் வளர்ச்சியில் செல்வாக் குச் செலுத்தாமலும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்குப் (ஐவெநசயெவழையெட யுககயசைள) பொறுப்பாக நியமிக்கப்பட் டதுதான் இவரது முதலாவது அடையாளம்.

இந்த அடையாளத்தில் படிப்படியாகத் தனது தனிப்பட்ட ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் இவர் கவனமாகச் செயற்பட்டிருந்தார். அரபு மொழியில் இவருக்கு இருந்த பாண்டித்தியம், அரபு நாடுகளின் பார்வையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் பக்கம் திருப்பி, பெருந்தலைவரின் தொடர்புகளையும் விசாலமாக்கியது. இந்த விசாலமான தொடர்புகள், அரபு நாடுகளின் நிதியுதவியைப் பெறுவதற்கு மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிராக்கியையும் ஏற்படுத்தியது. மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் நம்பிக்கையை வென்றிருந்த ஹாபிஸ் நஸீர், கட்சியின் நிதி விவகாரங்களுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட் டார். இவ்வாறான இவரது வளர்ச்சியே, முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் சமூக அரசியலிலும் ஹாபிஸ் நஸீரைப் பிரபல்யப்படுத்தியது.

முஸ்லிம் தனித்துவ அரசியலில் மற்றொரு பரிமாணமாக 'ஜனநாயக ஐக்கிய முன்னணி' (னுருயு) மற்றும் 'முஸ்லிம் தேசிய முன்னணி' (ஆNயு) போன்ற கட்சிகளை ஆரம்பித்தாலும், தனித்துவ அரசியல் கட்சிகளாகக் கூறுபடுவது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமாக அமையாதெனக் கருதினார். இதனால், மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து ஹாபிஸ் நஸீர் முன்னெத்த பணிகள், அவரை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரராக்கி பின்னர், முதலமைச் சராக்கியது. இத்துடன் நின்றுவிடாது, அவரை இன்று தேசிய அரசியலுக்கும் அழைத்து வந்துள்ளது.

'கிழக்கு முதலீட்டுத் திட்டம்' என அறிமுகப்படுத்தப்பட்ட இவரது பொருளாதாரத் திட்டம், கிழக்கில் வறுமையை விரட்டி, கிராமங்கள் தோறும் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்க பெரிதும் உதவியது. குடும்பப் பெண்கள் வேலை வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால், குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகளை ஒழிப்பதற்கே இத்திட்டத்தை இவர் அறிமுகப்படுத்தினார். மாகாண அமைச்சராக இருந்த காலத்தில், நன்கு பிரசித்தி பெற்றிருந்த இவரது 'கிழக்கு முதலீட்டுத் திட்டம்' வெளிநாடுகளின் குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. கிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டமெங்கும் இத்திட்டத்தால் தனது அடையாளத்தை நிலைப்படுத்திய இவர், தேசிய அரசியலில் கால்பதிப்பதற்கான களமாக இந்த அடையாளத்தைப் பயன்படுத்தினார். தன்னை மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியலை நிலைப்படுத்த இவரது அடையாளம் உதவியுள்ளதையும், இவரது பொதுத் தேர்தல் வெற்றி பறைசாற்றி யுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர் உட்பட மிகப்பெரும் சவால்களைத் தகர்த்தெறிந்து, பாராளுமன்றம் வந்து ள்ளமை சாதாரண சாதனையல்ல. தமிழர்களின் ஏக அங்கீகாரமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்குள்ள ஒரு மாவட்டத்தில், மற்றுமொரு சிறுபான்மை சமூக த்தின் தனித்துவத்தை வென்றெடுப்பது சாமான்ய அரசியலில்லை. அதுவும், கட்சிக் குள் மட்டுமன்றி பல குத்துவெட்டுக்கள், குழிபறிப்புகளைத் தாண்டியே ஹாபிஸ் நஸீர், தனது ஆளுமையை வளர்த்து, சமூக அரசியல் அடையாளத்தையும் வென்று ள்ளார். உண்மையில் இது மகிழ்ச்சியளிக்கிறது. முதற்போட்டியிலே, பல சிகரங்க ளைச் சாய்த்து வெற்றிக் கம்பத்தை தொட்டுள்ள இவர், சமூக இலட்சியத்துக்கும் பலம் சேர்த்துள்ளார்.

பிராந்திய அரசியலில் பல அனுபவங்களைப் பெற்றதால்தான், இவர் தேசிய அரசியலுக்கு வந்ததாகவும் சிலர் சிலாகிக்கின்றனர். சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பகிர்வுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரக் கொள்ளளவு போதாமலுள்ளன. மட்டுமல்ல, உள்ள அதிகாரங்களுக்கும் சில கடிவாளங்கள் இடப்பட்டுள்ளமை, சிறுபான்மை மக்களின் அரசியற் செயற்பாடுகள் சுதந்திரமற்றுக் கிடப்பதாகத்தான் இவர் கருதிகிறார். உரிமை அரசியலாகட்டும், அபிவிருத்தி அரசியலாகட்டும்! 'தேசிய அரசியல் இணக்கப்பாடுகள்தான் சாத்திய மானவை' என்பதுதான், ஹாபிஸ் நஸீரின் பரிணாமமடைந்த புதிய அரசியல் சித்தாந்தங்களாகும் இதனை உரியமுறையில் பேணி புதிய இலக்குகளை தொடர அவரை வாழ்த்துகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :