மேற்படி விடயம் தொடர்பாக, எமது நாட்டில் கோவிட் - 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அஹதிய்யாப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் எதிர்வரும் 2020 ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முதல் அஹதிய்யா பாடசாலைகளின் 6ம் தரத்திற்கு மேல் உள்ள வகுப்புக்களை ஆரம்பிப்பதுடன் 2020 ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக் கிழமை தரம் 1 முதல் தரம் 5 வரைக்குமான சகல வகுப்புகளையும் ஆரம்பிப்பதுடன் அன்றைய தினம் முதல் சகல குர்ஆன் மத்ரஸாக்களையும் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் வேண்டிக் கொள்கின்றது.
இதன் போது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயாமாக பின்பற்றுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் கேட்டுக் கொள்கின்றார்.
0 comments :
Post a Comment