த.தே.கூட்டமைப்பு தேசியபட்டியல் எம்.பி.யாக கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன் (9) நியமிக்கப்பட்டார்.
இதனை கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிஙகம் வெளியிட்டார். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழ்ப்பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
அந்த இடத்திற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ஒப்புதலுடன் கலையரசனை நியமிக்க கட்சி தீர்மானித்தது. அதற்கமைவாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்தைடுத்து தமிழப்பிரதேசங்களில் பட்டாசு ஒலி கேட்டது.சம்மாந்துறைத் தொகுதி வரலாற்றில் முதல்தடவையாக தமிழர் ஒருவர் எம்.பியாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
0 comments :
Post a Comment