ஹட்டன் கே.சுந்தரலிங்கம் -
புதிய பாராளுமன்றத்திற்கு இம்முறை தேர்தலில் மீண்டும் தெரிவான மஹிந்த ராஜபக்ஜ அவர்களின் பதவி பிரமாணத்தினை முன்னிட்டு மலையக நகரங்களில் பட்டாசு கொளுத்தி ஆதாரவாளர்கள் இன்று தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஹட்டன் நகரத்திலுள்ள வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது பெரமுண மக்கள் பிரதிநிதிகள் இன்று காலை மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்பின் போது அனைத்து இன மக்களும் ஒன்று திரண்டு பட்டாசு கொழுத்தி பாற்சோறு ஊட்டி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அதிக வாக்குகளை பெற்று வெற்றியீட்டி இருந்தார்.இதனை கொண்டாடும் முகமாகவே இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன், பொது பெரமுண உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment