சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்தின் பல இடங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் 18 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
வட, வட மத்திய, மேல், தென் மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும், மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment