முஸ்லீம்களையும் கோட்டாபய தலைமையிலான அரசையும் மூட்டி விடும் -வியாழேந்திரன்

ட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்களுக்கும் கோட்டபாய தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே பிரிவினையை உண்டாக்குவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் செயற்பட்டு வருகின்றார்ன என்று பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட் முஸ்லீம் பிரிவு ஆதரவாளர் சங்க செயலாளர் எம்.எம். இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையில் இடைவெளியை உண்டாக்கி அரசாங்கத்தை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் மக்கள் மீதான நம்பிக்கையீனத்தை தோற்றுவித்து அதன்மூலம் மாவட்டத்தில் தான்மாத்திரம் அரசாங்கத்தோடு இணைந்து வெசயற்படலாம் என்ற பெராசையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செயற்படுவதுடன் மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் உறவை சீர்குழைக்கும் முயற்சியிலும் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட 2005ம் ஆண்டு தொடக்கம் அவர் தலைவராக இருக்கின்ற பொதுஜன பெரமுன கட்சிக்கு மாவட்ட முஸ்லீம்கள் தொடர்ச்சியாக வாக்களித்தே உள்ளனர் அக்காலப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் பிரதேச சபை உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமனற்ற பிரதிதிநிதித்துவம் என்று தெரிவு செய்யப்பட்டு தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த போதுமாவட்ட அபிவிருத்திக்கும் இன நல்லுறவுக்கும் உழைத்தனர் என்பதே வரலாறு.

இது இப்படி இருக்க தற்போது வியாழேந்திரன் அவர்கள் தமிழ் டயஸ்போரா அமைப்புக்களின் தரகு பணத்தைபெற்றுக்கொண்டு கொந்தராத்து அடிப்படையில் இனங்களுக்கிடையில் இன மறுகழ்களை ஏற்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய சிக்கல்களை தோற்றுவிக்க இவர் களம் இறங்கியிருக்கிறார் என்ற சந்தேகம் முஸ்லீம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது இது தொடர்பில் புலனாய்வுத்துரையினர் கூடிய கரிசனை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முஸ்லீம் மக்களிடையே நிலவுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் மக்களை சதி முயற்சியிடுன் மாவட்டத்தில் முஸ்லீம்கள் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுவதைஇனவாதம் பேசி தடுத்து நிறுத்துவதும் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் முழு முஸ்லீம் மக்களுக்கும் எதிராக செயற்படுவதை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் மிகத்தெளிவாக உணர்ந்துள்ளனர். இவ்வாhக முஸ்லீம் சமுகத்திற்கு எதிராக தனது சுயரூபத்தை வெளிக்கொண்டு வரும் ஒருவராக மாவட்டத்தில் இவர் வலம் வந்து கொண்டு இருக்கின்றார். மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களும் இவரின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் தனி இனத்துவேசம் பேசி தனது வாக்கினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் செயற்படுவதால் பிரதமர் தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்கும் முஸ்லீம்களையும் வாக்களிக்காமல் இருக்கும் சிந்தனையை தூன்டுகிறார்.

சுமார் மூவாயிரம் தொடக்கம் ஐயாயிரத்திற்கம் உட்பட்ட வாக்குகளை மாத்திரம் பெற்று தமிழ் மக்களினால் ஒரு அரசியல் துரோகியாக நோக்கப்படும் இவரால் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன படுதோல்வியடைவதை வெளிப்படையாகவே உறுதி செய்கிறார்.

இத் தேர்தலலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் இவரோடு இணைந்து பயணிப்பதற்கு தயாரில்லை என்பதுதான் உண்மை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு முஸ்லீம் ஆதரவாளர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொள்வது பற்றி யோசிப்பதற்கான நிலவரத்தை உண்டாக்கியது வியாழேந்திரனின் இனவாத பேச்சுக்ளே காரணம் என்றும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :