குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ, மாநகர ஆணையாளர், மின் பொறியியலாளர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்யுமாறு, குருணாகல் நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
குறித்த 05 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு, சட்ட மாஅதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இப்பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று, குறித்த பிடிவிறாந்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் மதிப்பு மிக்க குருணாகல் புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, குறித்த சந்தேகநபர்கள் மீது பிடிவிறாந்து பெற்று, அவர்களைக் கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் நேற்று (06) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment