பொதுத்தேர்தலில் நான்காவது தடவையாகவும் வென்ற ஹரீஸ் : சாய்ந்தமருது, கல்முனை உட்பட மாவட்டம் முழுவதும் வரவேற்பு


நூருல் ஹுதா உமர்-
டந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்தின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் திகாமடுல்ல மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும்,நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இந்த வாரம் முழுவதும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களான நற்பிட்டிமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, நாவிதன்வெளி, ஒலுவில் உட்பட பல பிரதேசங்களிலும் அப்பிரதேச முக்கியஸ்தர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நடந்து முடித்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் வழங்கி நான்காவது தடவையாகவும் வெற்றி பெற மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் எனவும் மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்து வருகிறார்
இந் நிகழ்வுகளில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாநகர சபைகளின் உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் உட்பட கட்சியின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :