ஜே.எப்.காமிலா பேகம்-
வழக்கறிஞர் அருண லக்சிறி என்பவரால் குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 9, 30 மற்றும் 105 (4) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில், புத்தசாசன அமைச்சை வேறொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு, ஜனாதிபதியால் வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சை மாத்திரம் தம்வசம் வைத்துக்கொண்டு, புத்தசாசன அமைச்சுப் பதவிளை வகிக்காதிருப்பதன் மூலம், அரசியலமைப்பின் 9, 10 மற்றும் 12 (1) ஆகிய பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment