சம்மாந்துறைக்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படுமா?


மிக நீண்ட அரசியல் வரலாற்றைக்கொண்ட சம்மாந்துறை, இன்று அந்த மண்ணுக்கான பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவித்து நிற்கின்றது.
சுமார் 132.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கிட்டத்தட்ட 70601 மக்கள் சனத்தொகையையும் கொண்ட சம்மாந்துறை, காணி தொடர்பிலும் ஏனைய அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்தேவைகளைக் கையாளவும் பாராளமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை வேண்டிநிற்கின்றது.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சம்மாந்துறைத் தொகுதியில் 87643 பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் இருந்தபோதும் 66808 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இதில் 64389 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக அமைந்திருந்தன.
அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐக்கிய மக்கள் சக்தி 22021 வாக்குகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 13940 வாக்குகளையும் தேசிய காங்கிரஸ் 12726 வாக்குகளையும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி 4804 வாக்குகளையும் அகில இலங்கை தமிழர் மஹாசபை 4542 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4307 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 344 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 173 வாக்குகளையும் ஏனைய கட்சிகளும் சுயட்சைக் குழுக்களும் ஒருசில நூறு வாக்குகளையும் பெற்றிருந்தன.

சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியைப் பொறுத்தமட்டில் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பல்வேறு அரசியல் கட்சிகளின் வெற்றிகளுக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. இருந்தபோதும் அந்த மண்ணுக்கான பிரதிநிதித்துவம் இழக்கடிக்கப்பட்டுள்ளது.
87643 வாக்குகளைக் கொண்டிருந்தபோதும் சம்மாந்துறை அந்த மண்ணுக்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு அந்த பிரதேசத்தில் இருக்கின்ற பள்ளிவாசலும் புத்திஜீவிகளும் மௌனம் சாதித்ததை பிரதான காரணமாகக் கொள்ள முடியும். சாய்ந்தமருதில் பள்ளிவாசலை முன்னிலைப்படுத்தியும் பொத்துவிலில் மக்களை உணர்வூட்டியும் ஒன்றுபட்டததைப் போன்றாவது சம்மாந்துறை மக்கள் ஒன்றுபட்டிருந்தால் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தக்கவைத்திருக்க முடியும்.
சம்மாந்துறை மக்கள் பல்வேறுகட்சிகளுக்கும் வாக்களித்துள்ளனர். அந்தந்த கட்சிகள் இந்த மக்களை கவனத்திலெடுக்க வேண்டியது அவசியமாகும். இந்தக் கட்சிகள் சம்மாந்துறை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமா? கட்சிகளின் எதிர்காலங்களை என்றாவது ஒருநாள் தீர்மானிப்பவர்களாகவும் இருக்கப்போகப்போகிறார்கள் இவர்கள் விடயத்தில் கட்சிகள் கவனம் செலுத்துமா?
சம்மாந்துறை மக்களுக்கு யார் நிவாரணம் வழங்கப்போகின்றார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :