காரைதீவு சகா-
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா திருவிழாவின் இறுதிநாளான இன்று(4)செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவம் வழமைபோன்று இம்முறை சமுத்திரத்தில் இடம்பெறாது என ஆலயரிபாலனசபைத்தலைவர் கே.ஆறுமுகம் செயலாளர் எஸ்.சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக ஆலயபரிபாலனசபை எடுத்ததீர்மானத்திற்கமைவாக இம்முறை காவடியுடனான ஜனரஞ்சகமான தேருர்வலம் வெளிவீதி வலம்வருதல் அன்னதானம் என்பன முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் தீர்த்தோற்சவம் இம்முறை சமுத்திரத்தில் ஆடுவதில்லை எனவும் மாறாக ஆலய கிணற்றில் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த இவ்ஆடிவேல்விழா இன்றுடன் நிறைவடையவுள்ளது.
0 comments :
Post a Comment