ஊழலுக்கு கெதிரான தூய்மையான ஒரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள் இந்த ஆணையின் மூலம் தூய்மையான ஒரு அரசியல் கலாச்சாரத்தையும்,ஊழலுக்கு கெதிரான நேர்மையீனத்திற்கு எதிரான ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஸர்ரப் முதுநபீன் தெரிவித்தார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று(07-08-2020)ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வர்று தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-மக்களின் ஆதரவைகொண்டு தேர்தலை நடத்தலாம் அதில் வெற்றியும் பெறலாம் என்பதை நிரூபனம் செய்யும் வகையிலான ஒரு முறைமையை நாம் கடைப்பிடித்தோம் அது வெற்றியளித்திருக்கின்றது.
மக்களுக்கு அந்த விடையங்களுக்கான ஒரு ஆரதவு இருந்தன் அடிப்படையில் இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம்.இந்தத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்காக எமக்கா உழைத்த வாக்களித்த அனைவருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த திகாமடுள்ள மாவட்டத்திற்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாகத்தான்; நான் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன் இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் சேவையாற்ற இருக்கின்றேன் குறிப்பாக இறக்காம் பிரதேசத்தில் உள்ள மக்கள் எனது வெற்றியின் பங்காளிகளாக இருந்திருக்கின்றார்கள் இந்தப் பிரதேசம் வளர்ச்சி காணவேண்டிய பிரதேசமாகும் என்பதை நான் நன்கு அறிவேன்.
எமது அரசியல் செயற்திட்டத்திலே இப்பிரதேசம் கவனத்தில் கொள்ளப்படும் என்ற உறுதி மொழியைச் செய்கின்றேன்.அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது. அந்த ஆசனம் எனக்குரியதானதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
என்மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக நிறுத்திய எமது கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கும்;,வாக்களித்த மக்களுக்கும் எனக்காகப் பாடுபட்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன என அவர்மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment