சத்தியமாக இந்த அரசியலில் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பா.உ.முஸாரப்

சுஆத் அப்துல்லாஹ்-


ரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும் அதில் இரண்டு கோடி, மூன்று கோடி என்று உழைத்துக் கொள்வார்கள். எனவே, நான் அல்லாஹ்வின் மாளிகையில் இருந்து சத்தியமிட்டு வாக்குறுதி வழங்குகிறேன் இந்த அரசியலால் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன் என்று திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஷர்ரப் முதுநபீன் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற பின்னர் பள்ளிவாயலுக்குச் சென்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு மக்களுடன் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்,

நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன் எனக்கு இருக்கின்ற கோட் போதும் நான் உழைத்து என்னுடைய குடும்பத்தை என்னையும் காப்பாற்றிக் கொள்வதற்கு.

என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும் அதற்கான வழியை அல்லாஹ் காட்டித் தந்துள்ளான் - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :