தொடரும் சீரற்ற காலநிலையால் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

த்திய மலை நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சீரற்ற காலநிலை நிலவி வருவதனால் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொடர் மழையுடன் கடும் குளிரும் நிலவி வருவதனால் மக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
அடிக்கடி பனி மூட்டம் காணப்படுவதனால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன போக்குவரத்தும் தாமடைந்து வருகின்றன.
கடும் குளிர் காரணமாக தேயிலை தோட்டங்களில் வேலையாட்களும் குறைந்துள்ளன.

இதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடும் குளிரான காலநிலை நிலவுவதனாலும் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள்,தங்களது கால் நடைகளுக்கு புற்களை அறுப்பதில் ,சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.விவசாயிகள்,தனது தோட்டத்தில் சென்று வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மரக்கறி உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளன.

தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்,வர்த்தகர்கள் கடும் பனி மற்றும் கடும் குளிர் காரணமாக தோட்டங்களுக்கு வேலைக்கு சமூகம் தராமையினால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
நீரேந்தும் பிரதேசங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகியதன் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அடிக்கடி திறக்கப்படுகின்றன.

எனவே நீர்த்தேகத்தின் கீழ் தாழ் நலப்பகுதியில் வாழும் பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மினசார சபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதே வேளை காசல்ரி,மவுசாகலை,கெனியோன்,லக்ஸபான நவலக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன.

இதனால் குறித்த நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் நீர் மின் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில வாரமாக மலையகத்தில் பல பகுதிகளில் தொடர்;ச்சியான மழை பெய்து வருவதானல் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.இதனால் மலைகளுக்கு மண் தி;ட்டுகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதாகமாக இருக்குமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :