19ஐ நீக்க கோட்டாவுக்கு இணக்கமில்லை?

ஜே.எப்.காமிலா பேகம்-


19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது அவ்வளவு சுலபமாக விடயமல்ல. அது நீக்கப்பட்டாலும் பிரச்சினைகள் நீடிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

ஆகவேதான் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இணக்கமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பஸில் ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

18ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவியின் ஆயுட்காலம் நீடிக்கப்படுவது குறித்து பொதுமக்களிடையே சற்று எதிர்ப்பு உள்ளது. 19ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்வதற்கும் மக்களிடையே விசனம் இருக்கின்றது.

இதற்காக அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதோடு மாற்று வழியாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே சிறந்த விடயமாகக் கருதமுடியும் என்று பஸில் கூறியுள்ளார்.

இதன் பின்னரே 19ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :