ரத்தன தேரரா? ஞானசார தேரரா? முடிவு இன்று!


ங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் பதவிக்கு நியமிக்கப்படுகின்ற நபர் தொடர்பில், இன்றைய தினம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் தனது பெயரைக் குறிப்பிட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துவிட்டு, தலைமறைவாகியுள்ளார்.

எனினும், எங்கள் மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள், கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை, தேசியப் பட்டியல் பதவிக்கு பரிந்துரைத்துள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலாளரினால் முன்வைக்கப்படுகின்ற பெயரையே, தேர்தல்கள் ஆணைக்குழு வழமையாக வர்த்தமானியில் வெளியிடுகின்றது.
எவ்வாறாயினும், வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் தற்காலிகமாகவே எங்கள் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், முன்னர் பரிந்துரைக்கப்பட்டதன் பிரகாரம், ஞானசார தேரரின் பெயரையே வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும் என கட்சியின் பெரும்பாலனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியும் இதுவரை தமது தேசிய பட்டியல் உறுப்பினரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கவில்லை.
இந்தப் பின்னணியில், நாளைய தினம் புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் கட்சியின் ஆசனங்கள் வெறுமை நிலையில் இருக்கும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வர்த்தமானியில் பெயரிடப்பட்டுள்ள ஏனைய 223 உறுப்பினர்களும் நாளைய முதலாவது அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :