கந்தளாய் பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை நடவடிக்கைகள் மும்முரம்


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தளாய் குளத்தின் நீரினை பயன்படுத்தி 16,200 ஏக்கர் நிலப்பரப்பில் இம் முறை சிறு போக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டது.
கந்தளாய், பேராறு,பொட்டம்காடு,வான்எல,ஜயந்திபுர,சூரியபுர, பழைய வாய்க்கால் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளிலே அறுவடை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் மனித வளங்களை பயன்படுத்தாது இயந்திரங்களை கொண்டே அறுவடை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
கந்தளாய் பிரதேசத்தில் சிறந்த விளைச்சல் ஏற்பட்டுள்ளதோடு நெல்லிற்கான விளையும் சிறப்பாக காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு மூடை நெல் மூவாயிரம் ரூபாக்கு மேல் செல்லுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த பெரும் போகத்தில் அறக்கொட்டியான் தாக்கம் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :