ஜே.எப்.காமிலா பேகம்-
சுமந்திரனுக்கு எதிராக யாழ். வாக்கெண்ணும் நிலையமான மத்தியகல்லூரியடியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
துரோகி சுமந்திரன் எனக் கூறி அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறித்த இடத்துக்கு சுமந்திரன் பிரசன்னமாகியிருந்த நிலையி
ல் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பப்பட்டது. தற்போது வரை குறித்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில், பொலிஸார் தடியடி நடத்தி எதிர்ப்பாளர்களை விரட்டி வருகின்றனர். இதன்போது மாவை சேனாதிராஜாவின் மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த எதிர்ப்பார்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், முன்னாள் வட மாகாண அவைத்தலைவரிடம் சென்று, நாங்கள் விரைவில் சுமந்திரனை விரட்டுவோம் எனச் சவால்விடுத்தனர்.
இதற்கிடையில் அங்கிருந்து வெளியேறிய சசிகலா ரவிராஜ் தரப்பினர், தம்மை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டனர் எனத் தெரிவித்துச் சென்றனர்.

0 comments :
Post a Comment