ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த விசேட கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இதன்போது தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளை பெற்று 54 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றிருந்தது.
அதன்பிரகாரம் தேசியப்பட்டியல் ஊடாக 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்தித்த எவருக்கும் தேசியப் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment