அம்பாறையில் நேற்றுநடைபெற்ற 'அன்புக்கரங்கள்' அமைப்பின் மாவட்டமட்டக்கூட்டத்தில் தீர்மானம்.
காரைதீவு நிருபர் சகா-எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்மக்கள் சார்பில் ஓரணியில் ஒருசின்னத்தில் போட்டியிட சகல கட்சிகளுக்கும்அழைப்பு விடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் நேற்று (16) ஞாயிற்றுக் கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்திலே நடைபெற்ற மாவட்டமட்ட ஏற்பாட்டுக்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு 'அன்புக்கரங்கள் அமைப்பு' ' ஒன்றுபடுவோம் ஒரு குடையின்கீழ் 'என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நேற்று அமைப்பின் தலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தலைமையில் மாவட்ட மட்டபிரமுகர்களுக்கான ஆரம்பக்கூட்டம் நடைபெற்றது.
அமைப்பின் பிரமுகர்களான பொறியியலாளர்இராசையா யுவெந்திரா ஊடகவியலாளர் எஸ்.சுகுமார் ஆகியோரின் விளக்கவுரையுடன் ஆரம்பமானது.
கூட்டத்தில் அதிதிகள் வரிசையில் கல்முனை தமிழ்பிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ் பொறியியலாளர்களான வி.ரி.சம்பந்தன் பி.இராசமோகன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா வைத்தியஅதிகாரி டாக்டர் றேய்மன் ஆகியோர் முதலில் உரையாற்றினர்.
பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஆலயங்களின் நிர்வாக சபையினர் அனைத்து தொழில் சார் சங்கத்தினர் விளையாட்டுக் கழகங்களின் அங்கத்தவர்கள்இ அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து தமிழ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என சுமார் 500பேரளவில் கூட்டத்தில் பங்குபற்றினர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவத்தை இழந்த காரணத்தின் எதிரொலியாக கிழக்கு மாகாணசபைக்கான இம்முன்னேற்பாடான கூட்டம் நேற்று இடம்பெற்றது.
அங்கு ஏற்பாட்டாளர் சார்பில் பொறியியலாளர் யுவெந்திரா உரையாற்றுகையில்:
ஒரே சின்னம் தொண்ணூறுவீத வாக்களிப்பு என்ற இலக்கைவைத்து செய்றபடுவோம்.மனதெங்கும் தோல்வியின் வலிகள் ரணமாக முகங்கள் இறுகிப்போயிருக்கும் உங்களுடன் நாங்களும் இணைந்தே நிற்கின்றோம்.
'யாரோடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்..' என்ற கணக்காய் இந்தத் தோல்விக்கு யார் காரணம்? என ஆராய்ந்து பார்க்கும்போது அரசியல் தலைமைகளில் இருந்து நம்மால் செய்ய முடிந்ததை செய்யாது விட்ட மக்கள் வரை எல்லோருமே பங்களிப்புச் செய்திருக்கின்றோம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இந்தத் தோல்வியில் நாம் பெற்ற படிப்பினை இனிமேலும் நாம் பிரிந்து பிரிந்து நின்று தேர்தலுக்கு முகம் கொடுப்போமாயின்இ அதே போன்று வாக்களிப்பபதில் அசமந்தம் காட்டும் சமூகமாக இருப்போமாயின் இனி வரும் தேர்தல்களிலும் இந்தத்தோல்வி தொடரவே செய்யும்.
எனவே ' ஒரே சின்னம் ஒன்பது பத்து வாக்களிப்பு' என்ற இலக்குடன் பகைமைகளை மறந்து அனைத்து தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அனைத்து தரப்பினரும் முழுமூச்சாய் இயங்கும் போது மாத்திரமே எமக்கே உரித்தான பிரதி நிதித்துவங்களை காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற உண்மையை இந்தத் தேர்தல் முடிவு எங்கள் முகங்களில் ஓங்கி அறைந்துள்ளது.
' நீ அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வாயாயின் உனக்கு விருப்பமில்லாதவர்களால் ஆளப்படுவாய் 'என்ற பிடல் காஸ்றோவின் சாகா வாக்கியத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே அன்பார்ந்தவர்களே நமது மாவட்டத்தின் தலைவிதியை நாமே தீர்மானித்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருகின்றோம். இது தொடர்பாக பொதுமக்களால் பொதுமக்களுக்காக பொருத்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் வழி ஒழுக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் வந்து நிற்கின்றோம்.
மிக விரைவில் மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் சாத்தியங்கள் பெருமளவாக காணப்படுவதால் இப்போதிலிருந்து அதற்கான மதி நுட்பமான வியூகங்களை அமைத்து 3 பிரதி நிதிகளை அனுப்பி வைப்பதன் மூலமேயே எங்கள் மீது இப்போது விழுகின்ற மற்றவரின் ஏளனப் பார்வைகளுக்கு சரியான பதிலடியைக் கொடுக்க முடியும் . என்றார்.
இறுதியில் பணிக்குழுவொன்றும் ஊர்ரீதியாக தெரிவானது. அவர்களது கூட்டமும் அங்கேயே இடம்பெற்றது. அடுத்த திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment