வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் 2020 பாராளுமன்ற தேர்தல் வியூகம் இறைவனின் உதவியால் மேலதிக 2 முஸ்லிம் ஆசனங்களை அம்பாறை மாவட்டத்தில் பெற்றுத் தந்துள்ளது.
இந்த பதிவை நடந்து முடிந்த தேர்தல் பெறுபேறுகளை ஆதாரமாக வைத்து பதிவிடுகிறேன்.
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் (Registered votes) 513979
அளிக்கப் பட்ட வாக்குகள் (Polled votes) 402344.
செல்லு படியான வாக்குகள் (Valid votes) 385997
5% வெட்டுப் புள்ளி (5% cut off point) திட்டத்திற்கு மேலாக பெறப்பட்ட வாக்குகள் 365150. பெற்ற கட்சிகள் முறையே
SLPP (மகிந்த அணியினர்) - 126012
SJB (சஜித் ஹக்கீம் அணியினர்) - 102274
ACMC (ரிசாட் அணியினர்) - 43319
NC (அதாவுல்லா அணியினர்) - 38911
AITM (கருணா அணியினர்) - 29379
ITAK (தமிழர் விடுதலைக் கூட்டணி) - 25255
5% வெட்டுப் புள்ளிக்கு குறைவாக பெறப்பட்ட வாக்குகள் 20847.பெற்ற கட்சிகள்
UNP - 6455
UNP - 6455
JJB - 5060 இதர சிறிய கட்சிகளும் சுயேட்சை குழுக்களும்.
அம்பாறை மாவட்டத்தில் Bonus ஆசனம் உட்பட 7 ஆசனங்கள். Bonus ஆசனம் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும்.
அளிக்கப் பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கு தேவையான அதிகூடிய வாக்குகள் 365150 ÷ 6 = 60858
இதன் அடிப்படையில் முதலாவது சுற்றில் SLPP 121716 (2 X 60858 = 121716) வாக்குகளைப் பயன்படுத்தி இரண்டு ஆசனங்களைப் பெற்றதன் பிறகு மிகுதியாக 4296 வாக்குகளை கொண்டு இருந்தது.
SJB முதலாவது சுற்றில் 1 ஆசனத்தையும் 41416 மேலதிக வாக்கு களையும் கொண்டிருந்தது.
இரண்டாவது சுற்றில் (Remainder) எஞ்சி இருந்த 3 ஆசனங்களும் தலா ஒரு ஆசனம் வீதமாக 43319 வாக்குகளைப் பெற்ற ACMC யும், 41416 மிகுதி வாக்கைக் கொண்டிருந்த SJB யும், 38911 வாக்குகளைக் கொண்டிருந்த NC யும் பெற்றது.
இறுதியாக SLPP bonus ஆசனத்துடன் 3 ஆசனங்களையும் SJB இரண்டு ஆசனங்களையும் ACMC யும் NC யும் தலா ஒரு ஆசனத்தை யும் பெற்றது.
இப்போது YLS Hameed அவர்கள் எவ்வாறு மேலதிக 2 முஸ்லிம் ஆசனங்களை அம்பாறை மாவட்டத்தில் பெறுவதற்கு பங்களிப்பு செய்தார்கள் என்று பார்ப்போம்.
ACMC Telephone இல் இணைந்து இருந்தால் NC யை SLPP இல் இருந்து பிரித்து இருக்க மாட்டார்கள். ACMC தனித்துப் போட்டி இட தீர்மானித் ததன் பிற்பாடுதான் NC அணியினர் தனித்துப் போட்டியிட கட்டாயப் படுத்தப் பட்டார்கள். NC தனித்தும் ACMC Telephone இலும் சேர்ந்து கேட்டிருந்தால் SLPP இரண்டு ஆசனங்களை மட்டும் தான் பெற்று இருக்கும் அவ்வாறு செய்வதற்கு SLPP இனர் மடயர்கள் அல்ல. மாறாக ACMC தனித்துப் போட்டியிடும் போது NC யும் தனித்துப் போட்டி இட்டால் SJB இன் ஒரு ஆசனத்தையோ அல்லது ACMC இன் ஆசனத்தையோ அல்லது தமிழர்களின் ஆசனத்தையோ இந்த Remainder எனும் கோட்பாட்டினூடாக NC பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்காக.
NC, SLPP யுடன் இணையும்போது மொத்த வாக்குகள்
126012 + 38911 = 164923 வாக்குகள்
ACMC, SJB உடன் இணையும் போது மொத்த வாக்குகள் 102274 + 43319 = 145593.
இப்போது ஆசனங்களை பார்ப்போம்
முதலாவது சுற்றில்
SLPP இரண்டு ஆசனங்களைப் பெற்று மேலதிகமாக 43207 வாக்குகளையும் கொண்டிருக்கும்.
SJB இரண்டு ஆசனங்களைப் பெற்று மேலதிகமாக 23877 வாக்குகளையும் கொண்டிருக்கும்.
எஞ்சி இருந்த 2 ஆசனங்களும் இரண்டாவது சுற்றில் (Remainder) 43207 எஞ்சிய வாக்குகளை கொண்டிருந்த SLPP க்கும் 29379 வாக்குகளைக் கொண்டிருந்த AITM ( கருணா அணியினர்) க்கும் தலா ஒரு ஆசனம் வீதம் வழங்க பட்டிருக்கும்.
இறுதியில் bonus ஆசனத்துடன் SLPP 4 ஆசனங்களையும் SJB இரண்டு ஆசனங்களையும் AITM ( கருணா அணியினர்) ஒரு ஆசனத்தை யும் பெற்று இருப்பார்கள்.
SLPP இல் பெரும் சமூகத்தை சேர்ந்த 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டு இருப்பார்கள். இம்முறை நான்காவதாக வந்த SLPP இன் விருப்ப வாக்கு 40394 (Rushan Malinda). Mr. Athaullah பெற்ற விருப்ப வாக்கு 36000. அதுமட்டுமல்ல Mr. Athaullah வின் 3 பேரையும் சேர்த்து மொத்தம் 5 எமது இனத்தவர்கள் கேட்கும் போது விருப்ப வாக்குகள் மேலும் குறைவடைந்திருக்கும்.
அதேபோல் SJB இல் இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டு இருப்பார்கள் ACMC கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் மறைந்து இறந்து போய் இருக்கும். மேலதிகமாக கருணாவும் பாராளுமன்ற உறுப்பினராக வந்து இனத் துவேசத்தை மூலதனமாக கொண்ட அரசியலை மிகவும் கடுமையாக முன்னெடுப்பதற்கு வழிவகுத்து இருப்போம்.
NC, SLPP உடனும் ACMC தனித்தும் கேட்டு இருந்தால்
NC & SLPP - 4 பெரும் சமூகத்தை சேர்ந்த ஆசனங்கள்
SJB - இரண்டு முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பிரதிநிதித்துவம்
ஒரு ACMC யின் பிரதிநிதித்துவம்.
கருணா அணியினரின் ஆசனம் SJB இன் இரண்டாவது ஆசனமாக மாற்றப் பட்டிருக்கும். ஏனெனில் இரண்டாவது சுற்றில் அதி கூடிய வாக்காக ACMC 43319 வாக்குகளையும் இரண்டாவது அதிகூடிய வாக்குகாக SLPP 43207 மூன்றாவது அதிகூடிய வாக்காகத்தான் SJB இன் 41416 வாக்கு அமைந்திருந்தது.
இறுதியில் மூன்று நமது சமூகத்தை சேர்ந்த பிரதிநிதித்துவம்.
YLS Hameed அவர்கள் SLMC உடன் சேர்த்து கேட்பது சம்பந்தமாக நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கணக்குகளை தெளிவாக விளக்கப் படுத்தியது மட்டும் அல்லாமல் NC, SLPP உடன் இணையும் போது SLPP NC கூட்டணி அண்ணளவாக 165000 வாக்குகளைப் பெறும் என்றும் அதேபோன்று ACMC, SLMC, SJB கூட்டணியாக கேட்கும் போது அண்ணளவாக 145000 திற்கும் 150000 திற்கும் இடைப் பட்ட வாக்குகளை பெறும் என்றும் மிகவும் தெட்டத் தெளிவாக விளக்கப் படுத்தினார்.
இதற்கான ஆதாரமாக அன்று கலந்து கொண்ட அனைவரும் அதாவது சகோதரர் ஹரீஸ், ஹக்கீம் மௌலவி மார்கள் உட்பட அனைவரும் உயிருடன் உள்ளார்கள்.
அது மட்டுமல்ல ACMC 90000 வாக்குகளை தாண்டும் போது ஒரு தேசியப் பட்டியலையும் பெறுவதற்கான சாத்தியமும் உள்ளது என்று ஒவ்வொரு மேடைகளிலும் கூறினார்.
இன்று 67766 வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் 67758 வாக்குகளைப் பெற்ற OPPP (ஞானசாரவின் கட்சி) யும் தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்று உள்ளனர். ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான அதி கூடிய வாக்குகள் 399963 (11598929 - செல்லுபடியான மொத்த வாக்குகள் ÷ 29 = 399963)
இந்த Remainder தத்துவம் நமது மக்களுக்கு புரியாது என்பதனால் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை இரு முறை (2015 & 2020) பெற்ற SLMC அணியினர் அம்பாறை மாவட்டத்தில் ACMC தனித்துப் போட்டியிட்டு நமது சமூகத்தின் ஆசனங்களை இல்லாமல் செய்யப் போகிறார்கள் என்று மக்களை ஏமாற்றினார்கள்.
மக்களையும் தனது ACMC கட்சியினரையும் தெளிவான பாதையில் தூர நோக்குடன் வழி நடாத்திய YLS Hameed அவர்களை பிரதேச வெறி, பண வெறி, பதவி வெறி பிடித்த அனைவரும், மக்களும் சேர்ந்து தோற்கடித்து விட்டார்கள்.
YLS Hameed தோற்க வில்லை மாறாக மக்கள் இவ்வாறான ஒரு அரசியல் மேதையை (அரசியல் அறிவு, மொழி அறிவு, வாதத் திறமை, தத்துணிவு, நேர்மை, இறையச்சம் கொண்ட ஒருவர்) இழந்து விட்டார்கள். இறைவன் அனைத்தையும் பார்த்தவாறு இருக்கிறான்.
பிற்குறிப்பு:
NC, ACMC, SLMC இணைந்து மரத்தில் அல்லது மயிலில் அல்லது குதிரையில் கேட்டு இருந்தால் 5 முஸ்லிம் ஆசனங்களை பெற்று இருக்க முடியும். அதாவது NC யின் 38911 + ACMC யின் 43319 + SLMC யின் அண்ணளவாக 75000 வாக்குகள் சேர்ந்த மொத்த வாக்குகள் 157230. இதன் மூலம் 4 மாவட்டத்திற்கான ஆசனங்களையும் ஒரு தேசியப் பட்டியலையும் சேர்த்து 5 ஆசனங்களைப் பெற்று இருக்க முடியும். இதற்கு சகோதரர் அதாவுல்லா விரும்பவில்லை காரணம் அவர் மகிந்த அணியைச் சேர்ந்தவர். அனைவரும் சேர்ந்து SJB இல் கேட்டிருந்தால் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்காது.
Dr. Y. L. Anpudeen
0 comments :
Post a Comment