இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளும்னற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ், தனது விருப்பு வாக்குகளை மீள எண்ணும்படி கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.
இந்தத் தகவலை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தேர்தல் நடந்துமுடிந்த பின் வாக்குகள் எண்ணும்போது சசிகலா ரவிராஜிற்கும், சுமந்திரனுக்கும் இடையே கடும் போட்டிநிலை ஏற்பட்டது.
இதனிடையே சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்கள் சுமந்திரனை அச்சுறுத்தியதுடன், அவருக்கெதிராக போராட்டமும் நடத்தியதால் வாக்கெண்ணும் நிலையத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டு பொலிஸாரும் குவிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
எனினும் இறுதியில் சுமந்திரன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment