ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்றினை சொகசு கார் ஒன்றில் வந்த இளைஞர் ஒருவர் திருடி மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று 19.07.2020 திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
குறித்த வீPட்டில் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது அது இருந்த இடத்திலிருந்து வேரொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமாராவினை பார்த்துள்ளனர்.
அதன் போது இளைஞர் ஒருவர் சொகுசு கார் ஒன்றில் 18.07.2020 அதிகாலை 5.27 மணிக்கு வந்து பிள்ளையார் சிலையினை திருடி செல்வதும் அதனை மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைப்பதும் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த ஆலயத்தின் சக்தி காரணமாக திருடியவர் மீண்டும் கொண்டு வந்து அச்சிலையினை வைத்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை அதற்கு முன் தனது வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் அது குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.
இது குறித்து சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா கருத்து தெரிவிக்கையில்