முற்போக்கு கூட்டணியுடன் இணைந்த வேட்பாளர்களும் ஆதரவாளர்களும்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்கள் திகாவோடு சங்கமம்

நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கங்காரு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்கள் இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களுக்கு அதரவினை வழங்கியுள்ளனர்.
கே ஆர் கிஷான் தலைமையில் இலங்கை தொழிலாளர் கட்சி போட்டியிடுகின்றது. தலைவருடனான கொள்கை முரண்பாட்டினையடுத்தே பொன்னுசாமி ஞானசேகரன், மோகனசுந்தரன் சஞ்சித் எடோன்சன் இருவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (23.07.2020) ஹட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் 300 பேர் எஸ்.செல்வா தலைமையில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தோடு இணையும் நிகழ்விலே இலங்கை தொழிலாளர் கட்சியின் வேட்பாளர்களும் இணைந்து ஆதரவினை தெரிவித்தமை குறிப்பிடத்தத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -