எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அம்பாறை பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திற்கு இன்று (23) மாலை வருகை தந்த பிரதமர் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை பொது மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரசார கூட்டத்திற்கு வருகை தந்து கலந்து கொண்டார்.
இதன் போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் றபீக் மாலை அணிவித்து வரவேற்றதுடன் இப்பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான விமலவீர திசாநாயக்க மற்றும் வேட்பாளர்களான சாந்தலிங்கம் றிஸ்லி முஸ்தபா கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.