நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன்- ஓட்டமாவடியில் சஜீத் பிரமதாச

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன் பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று சனிக்கிழமை (04.07.2020) ஓட்டமாவடியில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

ரனசிங்க பிரமேதாசாவின் பௌத்த சித்தாந்தத்தை ஏற்று நடக்கின்ற ஒருவன் எப்போதும் புத்தர் அவர்கள் எப்போதும் போதிக்கவில்லை சமுகங்களுக்கிடையிலே பேதமை மற்றும் பிரித்தாழுகின்ற தன்மையை எந்த சந்தர்ப்பத்திலும் புத்தர் சொன்னதில்லை.

எனது அன்புக்குரிய வாக்காளர்களே நாங்கள் எதிர்காலத்தில் ஆட்சி அமைககும் சந்தர்ப்பத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே வீடில்லா பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். கடந்த காலத்திலே என்னாள் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐயாயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறேன் அதனால் சொல்கிறேன் எதிர்காலத்தில் வீடில்லா பிரச்சினையை என்னால் தீர்க்க முடியும் என்று நம்பிக் கொள்ளுங்கள்.

அதே போன்று இந்த மாவட்டத்திலே கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்புமூன்று தொகுதிகள் இருக்கின்ற அந்த தொகுதிகளில் நகரங்களை மையப்படுத்தி தொகுதிக்கு ஒரு நவீன தொழில் பேட்டைகளை உறுவாக்க உள்ளோம். அத்தோடு அந்த தொழில் பேட்டைகள் பிரதேச செயலாளர் பிரிவு தோரும் விஸ்தரித்து இந்த பிரதேசத்தில் இருந்து வெளியூர்களுக்கு தொழிலுக்காக செல்லும் இளைஞர் யுவதிகளுக்கு தமது பிரதேசத்திலே தொழில் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதுடன் நாட்டின் அபிவிருத்தியில் உங்களையும் பங்காளர்களாக ஆக்குவேன்

இந்த இடத்திலே மிகவும் தெளிவாக நான் பேசுகிறேன் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை நவீன மயப்படுத்தி தருவதோடு இந்த பிரதேசத்தில் இருக்கின்ற விவசாய சமுகத்திற்கு நெல் களஞ்சிய சாலை அமைத்து தருவதோடு விவசாய சமுகம் பேசிக்கொண்டு இருக்கின்ற விழாலோடை மற்றும் மூக்கிரயன் ஓடை திட்டத்தை எனது நேரடிக்கண்காணிப்பில் செய்து தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே இந்த பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து மக்களும் எனக்கு அதிகபடியான வாக்கினை தந்தீர்கள் அதற்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன்.எனக்கு அதிகாரம் கிடைக்கின்றபோது அலரி மாளிகையிலோ அல்லது ஜனாதிபதி மாளிகையிலோ நான் தங்கியிருக்க போவதில்லை உங்களில் ஒருவனாக
நான் இருந்து கண்களால் பார்க்கக்கூடிய காதுகளால் கேட்கக்கூடிய வாய்களால் பேசக்கூடிய வேளைகளை இந்த மக்களுக்கு செய்வதற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றய கட்சிகள் போல் அல்ல எங்களது கட்சி கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் வாய்ச்சாடலுக்கு பேசுகின்ற கட்சியல்ல இந்த கட்சி கடந்த காலத்திலே நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியிகளின் அடிப்படையிலே மற்ற கட்சிகள் போல் வெள்கின்றோமா தோற்கின்றோமா என்று பார்க்கின்ற கட்சியல்ல எங்களது கட்சி எங்களுக்கு தேவையானது மக்களை சந்தோசமாக வைத்துக் கொள்வதுதான் அதன் அடிப்படையில் தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் தனித்தனியே அபிவிருத்தி சங்கம் ஒன்றினை ஆரம்பித்து உங்களது குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை உங்களது காலடிக்கு கொண்டு சேர்க்கவுள்ளோம்.

கடந்த காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ திருகோணமலை மாவட்டத்திற்கோ அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருக்கவில்லை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் இந்த தேர்தலின் பின்னர் நாங்கள் அமைக்கப்போகின்ற அரசாங்கத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் ஒருவரை நான் அமைச்சரவைக்கு அழைத்துச் செல்ல காத்துக் கொண்டு இருக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் நான் மட்டக்களப்புக்கு வரும்போது எனது மொழிபெயர்ப்பாளருக்கான நியமணத்தையும் வழங்கவுள்ளேன்.

நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன் பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் ரனசிங்க பிரமேதாசாவின் பௌத்த சித்தாந்தத்தை ஏற்று நடக்கின்ற ஒருவன் எப்போதும் புத்தர் அவர்கள் எப்போதும் போதிக்கவில்லை சமுகங்களுக்கிடையிலே பேதமை மற்றும் பிரித்தாழுகின்ற தன்மையை எந்த சந்தர்ப்பத்திலும் புத்தர் சொன்னதில்லை.

இந்தநாட்டிலே ஒரு சில அரசியல்வாதிகள் என்ன செய்யப்பார்க்கின்றார்கள் என்றால் பௌத்தபெருமானின் போதனைக்கு மாராக தெரியப்படுத்தாத விடயங்களை திருவுபடுத்திக்கூறி இனங்களுக்கிடையிலே முறன்பாடுகளை
தோற்றுவித்து அவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலுக்காக செயற்படுவது கவலைக்குறிய விடயமாகவுள்ளது. உண்மையான பௌத்தன் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படமாட்டான்.
பௌத்த மதத்தைப் பொறுத்தவகையிலே இந்த நாட்டின் அரசியல் யாப்பில் அதற்கென்று தனியான கௌரவமான இடம் அளிக்கப்பட்டுள்ளது அதே போன்று மற்றய மதங்களை மதிக்க வேண்டும் என்று யாப்பிலே தெட்டத்தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான பயங்கரவாத நிகழ்சி நிரழுக்கும் எங்களது ஆட்சியில் இடமளிக்கப்போவதில்லை இந்த நாட்டிலே இனமத பேதம் இல்லாமல் பயங்கரவாதம் இல்லாமல் இனங்களுக்கிடையில் முறன்பாடு இல்லாமல் அனைத்து விடயங்களையும் துடைத்தெரிந்து இந்த நாட்டிலே நல்லதெரு சமுதாயத்தை உறுவாக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை எங்களது ஆட்சியில் நிலைநாட்டுவேன்.

இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற அரசாங்கள் நாட்டை வழிநடத்திக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார்கள் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் ஒன்றில் மட்டும் கெட்டிக்காரர்கள் முஸ்லீம்களையும் பௌத்தர்களையும், பௌத்தர்களையும் இந்துக்களையும், முஸ்லீம்களையும் கிருஸ்தவர்களையும் பகைவர்களாக ஆக்கிவைக்கின்ற விடயங்களை மாத்திரம் நன்றாக செய்யக்கூடியவர்கள் என்று நான் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன் இவ்வாறு செய்து விட்டு நாட்டில் ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது.

இந்த பிரதேச மக்களுக்கு நான் தெரிவிப்பதெல்லாம் எந்தவித பயம் அச்சங்களுக்கு அப்பால் தொலைபேசியை வெல்ல வையுங்கள் எந்தவித வித்தியாசமும் பாராமல் ஒரே தாயின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் உங்கள் அனைவருக்கும் ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சேவைகள் இடம் பெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா வைரசை முஸ்லீம்கள்தான் நாட்டுக்கு கொண்டுவந்தார்கள் என்று சொல்லி முஸ்லீம்கள் மிகவும் மோசமானவர்கள் என்று சொல்லப்பார்த்தார்கள் அது வெற்றியளிக்கவில்லை நிங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் அடிப்படைவாதமாக இருந்தாலும் சரிதான் பயங்கரவாதமாக இருந்தாலும் சரிதான் சாதி பேதத்திற்கு அப்பால் நின்று வெல்ல வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது அந்த அடிப்படையிலே நீங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு செயட்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -