முன்னாள் அமைச்சர் கலாநிதி அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் மறைவின் மூன்றாவது ஆண்டு நிறைவு நாள்; 25.07.2020


மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம்
-மருதமுனை எம்.எம்.எம்.நியாஸ்-

கிழக்கு மாகாணத்தின் கல்முனைத் தொகுதியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து பல்வேறுபட்ட அபிவிருத்திகளில் முன்னோடியாக இருந்து இனமத பாகுபாடின்றி சேவை செய்த நம்பிக்கையின் நட்சத்திரம் ஏ.ஆர்.எம்.மன்சூர் இம்மண்ணை விட்டுப் பிரிந்து இன்றுடன்(25-07-2020)மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர மன்சூர் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களின் காலத்தில் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சராகவும்,அதே காலத்தில் கிழக்கு மாகாண பாதுகாப்பு கவுண்ஸிலின் உயர்பீட அங்கத்தவராகவும்,2003 ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் துவராகவும் பல பதவிகளை அலங்கரித்தவர்.

1933.05.30 இல் கல்முனைக்குடியில் எக்கீன் தம்பி ஆலிம் அப்துல் றஸாக் அவர்களுக்கும், முகம்மது அப்துல் காதர் சரீபா உம்மா அவர்களுக்கும் ஆறாவது பிள்ளையாக பிறந்த இவர் 1939 – 1943 காலப்பகுதியில் கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப் பெற்று 1943 ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அதன் பின்னர் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் ஆங்கிலத்தை ஆர்வமாக கற்றதன் காரணமாக பின்னர் மட்டக்களப்பு சிவானந்தா உயர்தரப் பாடசாலையில் இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

உயர்கல்வியை கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கற்று பின்னர் மிகவும் திறமையாக பரீடசையில் சித்தி பெற்றதன் காரணமாக 1955 ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1958ஆம்; ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.அதே ஆண்டில் கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து அதன் மூலம் எம்.மின்ஹா,எம்.றகுமத்,எம்.மரீனா ஆகிய மூன்று பிள்ளைகளுக்கும் தந்தையாக இருந்து அம்மூவரையும் சிறந்த ஒழுக்கமுள்ள, இஹ்லாசான நற்பிரஜைகளாக்கி அவர்களையும் உயர்ந்த இடத்திற்கு கொன்டு வந்தார்

1977 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஐ.தே.கட்சி அபேட்சகராக போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி,1979ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சரானார்.1989ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராகவும்,அதே வருடத்தில் வர்த்தக கப்பல்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் வர்த்தக கப்பற்துறை, வாணிபத்துறை அமைச்சராகவும் நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொன்டமை வரலாற்றில் முதல் தடவையாகும்.

இதற்கு உறுதுணையாக மறைந்த செயல் வீரர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக, மாவட்ட அமைச்சராக 17 வருடங்கள் தனது அரசியலை புனிதமாகவும், நேர்மையாகவும், களங்கமில்லாமலும், எவரையும் பழிக்குப்பழி வாங்காமலும் இவ்வுலக வாழ்க்கையை விட மறுமைநாள் பற்றிய எண்ணத்தோடு இஸ்லாமிய வாழ்க்கை வழியை பின்பற்றி தனது சேவையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் மாமனிதர்தான் மர்ஹூம் மன்சூர் அவர்கள். மேலும் இவரின் காலத்தில் பாடசாலைகளுக்கான பௌதீக வள அபிவிருத்தி,வேலைவங்கி(தழடி டீயமெ) மூலமான அரச நியமனங்களையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தார்.

அதே போன்று அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரிக்கான அமைச்சரவைப் பத்திரம்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்திற்கான குவைத் நிதி,முஸ்லிம் கல்வி மாநாட்டு பிரேரனைகளை பாராளுமன்ற உரைகளில் முன்வைத்தமை மற்றும் கல்முனைத் தொகுதியிலுள்ள பாடசாலைகளுக்கான பௌதீகவள அபிவிருத்தியில் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை, மஹ்மூத் பாலிகா, கல்முனை பற்றிமா தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, மருதமுனை ஷம்ஸ் மத்திய கலலூரி போன்றவற்றிற்கு பாரிய பங்களிப்புச் செய்தது மட்டுமன்றி மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் கட்டிடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மற்றும் 1ஊ பாடசாலைகளை 1யுடீ பாடசாலைகளாக மாற்றி அப்பாடசாலைகளில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை ஏற்படுத்தி மாணவர்களின் கல்விக்கு உரமூட்டினார்.

குறிப்பாக அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுடைய காலத்திலே கல்முனை பிராந்தியம் தென்கிழக்கு முகவெற்றிலையாக திகழ வேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்த அவர் கல்முனை நவீன சந்தை,பொதுநூலகம்,நீதிமன்றக் கட்டிடத்தொகுதி,பிரதேச செயலகம்,கல்முனை செயலகக் கட்டிடம், hடசாலைகள், இஸ்லாமாபாத் குடியேற்றத் திட்டம், கல்முனை இலங்கை வங்கிக் கட்டிடம், கல்முனை பொலிஸ் நிலையக் கட்டிடம், மருதமுனை மக்கள் மண்டபம், மருதமுனை இரு பெரும் வீட்டுத்திட்டங்கள், மற்றும் இன்னும் பல மக்கள் பயன்பெறக்கூடிய பல அபிவிருத்தி அரசியலை கோடிட்டுக் காட்டியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவித பிரதியுபகாரமும் எதிர்பாராது அநேக இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகைமைக்கேற்ப நூற்றுக் கணக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தார். 1992 ஆம் ஆண்டு அநேக தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் இவரின் சிபாரிசிலேயே,முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு ரணசிங்க பிரேமதாஸ அவர்களால் வளங்கப்பட்டது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் 2016.03.20ஆம் திகதி; மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இவரின் சேவையைப் பாராட்டி கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இவரின் அதியுயர் சேவையினால் பயனடைந்த மக்களின் துஆ பிரார்த்தனைகள் அன்னாரின் மறுமை வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதோடு, அவரின் இரண்டாவது வருட நிறைவு நாளான இன்று எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மேலான சுவர்க்கத்தை வழங்குவதற்காக இருகரம் ஏந்திப் பிரார்த்திற்;கின்றேன்.

எம்.எம்.எம்.நியாஸ்,
அதிபர்,
புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயம்,
பெரியநீலாவணை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -