புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயல் காவலுக்கு சென்ற ஒருவரை காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த என்.எம்.டி.மொஹம்மட் 62 வயதுடைய ஒருவரே யானைத் தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
புல்மோட்டை காட்டுத்தென்னை முறிப்பு பகுதியிலுள்ள தனது வயலுக்கு நேற்றிரவூ(8) வயற் காவலுக்குசென்ற நிலையிலே காட்டு யானை மறைந்திருந்து தாக்கியுள்ளதாகவும் பின்பு சில மணி நேரத்தின் பின்னர் பக்கத்து விவசாயிகளினால் யானையை துரத்தியதாகவும் காப்பாற்றப்பட்டு புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
