நிலக்கடலை அறுவடைவிழா!


காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்டத்தில் உப உணவு உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பு விவசாய போதனாசிரியர் இரா.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது.
இவ் அறுவடை விழாவின்போது, அம்பாறை மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

உப உணவுப் பயிர்ச் செய்கை பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார் ஒலுவில் பிரதேசத்துக்குப் பொறுப்பான பயிர்ச் செய்கை ஆலோசனை வழிகாட்டல்கள் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர் வி.நிரூசன் அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.ஏ.முபாறக் உள்ளிட்ட விவசாயத்துறை உத்தியோகத்தர்கள் துறைசார் முக்கியஸ்தர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -