நிள அளவை,காணி அபகரிப்பு,உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்ய வேண்டும்


ஹஸ்பர் ஏ ஹலீம் -


சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கவும் நிள அளவை காணி அபகரிப்புக்கு போராடும் ஒரு குரலை இந்த மண்ணுக்கு தெரிவு செய்ய வேண்டும். என முன்னால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃரூப் தெரிவித்தார்.

தோப்பூர்-ஆஸாத் நகர் பகுதியில் இன்று (20)மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்

இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியதும் தமிழ்,முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி சேவையாற்றக்கூடிய ஒரு தலைவனை இம் முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் ஓடி ஒழிகின்றவர்களை அனுப்பி பிரயோசனம் கிடையாது.

முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதியானவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் செய்தும் கூட பல மணி.நேரம் விசாரனைகள் இடம் பெறுகிறது அவரது குடும்பத்தையும் விசாரனைக்கு உட்படுத்துகிறார்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் பழிவாங்க நினைக்கிறார்கள்

தொல்லைப்படுத்தும் இவர்களுக்கான பாடமாக மாபெரும் வெற்றியை திருமலை மண் ஊடாக எடுத்துக் காட்ட வேண்டும் .திருகோணமலையில் தமிழ்,முஸ்லிம்களில் இருந்து ஒரு பயங்கரவாதியை கூட கைது செய்ய முடியாது இவ்வாறு பயங்கரவாதியும் இங்கு இல்லை என சவால் விட்டவன் நான்.இருந்த போதிலும் சஹ்ரான் என்கிற பயங்கரவாதியுடன் தோப்பூர் ஹாஜா முகைதீனை அப்பட்டமாக வீண் பழி சுமத்தி அண்மையில் கைது செய்துள்ளார்கள்.

தற்போதைய நிலையில் ஞானசேர தேரர் கூறுகிறார் வட கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் தமிழ் முஸ்லிம்களின் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்றும் இவ்வாறாக கூறுவோரை எந்த சவாலுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க கூடிய உரிமைகளை வென்றெடுக்க கூடியதுமான தலைமைகளை நாடாளுமன்றம் அனுப்பவேண்டும்.

இனவாதத்தை கக்குகின்ற விமல்,எஸ்.பி,ஹெகலிய, அத்துரலிய,ஞான சாரதேரர்,விஜேதாச போன்றோர்கள் உள்ளார்கள் துவேச பேச்சுக்களை பேசி எப்படியாவது இந்த மண்ணில் இருந்து சிறுபான்மை சமூகத்தை நீக்க வேண்டும் என்று ஈடுபடுகிறார்கள்.கடைசியாக முஸ்லிம் பிரதிநிதிகளின் வெட்டுப் புள்ளி முறைமை 12 வீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் விஜேதாச ஒரு பிரேரனையையும் கொண்டு வந்தார்.

உரிமைகளை விட்டுக் கொடுக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது தொள் பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் சிறுபான்மை சமூகத்தையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -