முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹீர் தெரிவிப்பு.
எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களை கைப்பற்றும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபையின் உறுப்பினரும் ஆதரவாளர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மாறும் நிகழ்வொன்று திங்கட்கிழமை (8) மூதூரில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேற்பாளர்கள் இருவர் ஐக்கிய மக்கள் சத்தியில் இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.
இதில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,மற்றும் மூதூர் நவாஸ் ஆசிரியர் இம்மாவட்டத்தில் வரலாறு காணாத வெற்றியொன்றினை எமது முன்னால் பாராளுமன்றஉறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நிலை நாட்டுவார்.ஏன் என்றால் அவரின் அரசியல் வாழ்க்கையில் மக்களுக்காக இனம் மதம் மொழி பிரதேச வாதம் பாராது அதிகமான சேவைகளை மேற்கொண்டுள்ளார்.தற்போதும் அதனைத் தான் செய்து வருகின்றார்.இம்மாவட்டத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு அமைச்சரை இம்மாவட்டம் அலங்கரிக்கும் இதற்காக மக்கள் வாக்குகளை சிதரடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தனி நபர் வாக்காக 42,000 வாக்குகளை பெற்றார் இந் வாக்கு வீதம் இன்னமும் தகர்க்கப்படவில்லை இம் முறை நடைபெறும் பொதுத் தேர்தலில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அதனை விட கூடுதலான வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லுவார்.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்களின் உரிமைக் குரலாக செயற்பட்டு வருகின்றார் காணிப் பிரச்சினைகள்,மணல் அகழ்வு,கால் நடைமேய்ச்சல் தரை பிரச்சினை போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் ஓரளவேனும் பிரச்சினைகளை கண்டுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரோடு பேசி அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவார் என்றார்.
