மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து கால்நடையாக பொகவந்தலா பகுதிக்கு பசுமாடு ஒன்றினை அனுமதி பத்திரமின்றி கொண்டு சென்றிருக்கும் போது மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம் நேற்று (08) திகதி இடம்பெற்றுள்ளது பொலிஸாருக்கு கிடைத்த இரகிசிய தகவலினையடுத்து குறித்த நபர் மஸ்கெலியா பிரவுன்சிக் எமோலினா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சந்தேக நபர் இன்று (09) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
