அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க ஏற்பாட்டில் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு


பாறுக் ஷிஹான்-
கொவிட் 19 அனர்த்தத்தினை முன்னிட்டு இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக உலர் உணவு பொருட்கள் உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலருணவு பொருட்கள் யாவும் சுமார் 32 உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு புதன்கிழமை(3) மாலை கல்முனை சந்தான்கேணி விளையாட்டு அரங்கில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது குறித்த உலருணவு பொருட்களை அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க தலைவர் வை கே ரஹ்மான் மற்றும் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இவ்வுலருணவு பொருட்களில் அத்தியவசியப்பொருட்கள் உள்ளடங்குவதுடன் கொரோனா வைரஸினால் சிரமப்பட்ட கழகங்களுக்கு அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க செயலாளராக மீண்டும் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் அயராத முயற்சியின் பயனாக பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -