நுவரெலியா மவட்டத்தில் இம்முறை மக்கள் அளிக்கும் வாக்குகள் வெற்றி வாக்குகளாக அமைய வேண்டும்.உங்களுக்கு தெரியும.; இன்று மலையக மக்கள் தலைவர் திகாம்பரத்திற்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள.; அவர் இம் மாவட்டத்தில் வெற்றி பெருவதன் மூலம் நாங்கள் அவருடன் இணைந்து பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
ஆகவே நீங்கள் வெற்றி பெறாதவர்களுக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்காது வெற்றிபெரும். எமது தலைவருக்கும் அவரது அணிக்கும் வாக்களிக்க வேண்டுமென, தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நேற்று (26) ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாங்கள் இன்று செல்லும் இடங்கள் எல்லாம் தலைவர் திகாம்பரத்திற்கே வாக்களிப்பதாக தெரிவிக்கிறார்கள்.அதனால் நாங்கள் வெற்றி பெருவது உறுதியாகி விட்டது. கடந்த காலங்களில் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மலையக பகுதியில் செய்து காட்டியுள்ளோம.; அதனை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த தோட்டத்திற்கு வரும் பாதை கூட குன்றும் குழியுமாக காணப்பட்டது.பல வருட காலமாக எவரும் இதனை செய்யவில்லை. நடந்து கூட செல்ல முடியாத நிலையே காணப்பட்டது.
நீங்கள் இறுதி காலத்தில் எங்களுடன் இணைந்தாலும் கூட நாங்கள் அதனை செய்து கொடுத்திருக்கிறோம். ஆகவே நீங்கள் இந்த பாதையில் காலடி எடுத்து வைக்கும் போது இதனை யார் செய்து கொடுத்தார்கள் என்று நினைவு உங்களுக்கு வர வேண்டும். இங்குள்ள இளைஞர்கள் மிகவும் உட்சாகமானவர்கள் அவர்கள் இங்குள்ள குறைபாடுகளை எப்போதும் எங்களிடம் தெரிவிப்பார்கள்.
முகநூலில் கூட எங்களை விட்டுவிட வில்லை.நாங்கள் எந்த ஒரு அபிவிருத்தியாவுது திறந்து வைத்தால் எப்போது எங்கள் பாதை என்று தொல்லை கொடுத்ததன் காரணமாக உங்கள் பாதை இன்று இந்த அளவுக்கு அபிவிருத்தி கண்டுள்ளது.
ஆகவே இந்த தேர்தலில் யானை,அன்னம்,மொட்டு என பல சினங்களில் பலர் போட்டியிடுகின்றனர்.அதில் எதனை தெரிவு செய்தால் இந்த பிரதேசம் அபிவிருத்தி காணும் என்பதனை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.இந்த தேர்தலில் நிறைய பேர் வாக்கு கேட்க வருவார்கள் வாக்கு கேட்பவர்கள் உங்கள் சொந்தக்காரர்களாக கூட இருப்பார்கள். அதனை எல்லாம் நினைத்து நீங்கள் வாக்களிக்க கூடாது.
ஏனென்றால் பாராளுமன்றம் போக வேண்டும் என்றால் 50000 வாக்குகளில் இருந்து தான் தொடங்க வேண்டும் எமது தலைவர் ஒரு லட்சம் வாக்குகளில் இருந்து ஆரம்பிக்கிறார.; அதனால் அந்த குழுவும் ஒரு லட்சத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது.அதனால் நீங்கள் போடும் வாக்குகள் கட்டாயம் வெற்றி வாக்குகளாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.