கருப்புப்பண வர்த்தகர்களை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கம்-அனுரகுமார திஸாநாயக்க

ஜே.எப்.காமிலா பேகம்-

றுப்புப் பண வர்த்தகர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக அனுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் முன்னிலையாகியிருந்தார்.

எவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக கடந்த 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சாட்சியம் வழங்கியதன் பின்னர், நிஸ்ஸங்க சேனாதிபதி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளை தோற்கடிப்பதற்காக பணம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -