இம்ரான் மஹ்ரூபிற்கு போட்டியாக அவரது தங்கையை நியமித்த ஐ.தே.க !


நூருல் ஹுதா உமர்-
க்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த அமைச்சர் எம்.ஈ.எச்.மஹ்ரூபின் புதல்வியான ரோகினா மஹ்ரூப் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமன கடிதத்தை, சிறிகொத்தாவில் வைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடமிருந்து, கடந்த சிலதினங்களுக்கு முன்னர் (02) அவர் பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன கருத்துவேறுபாடு காரணமாக வெவ்வேறாக இயங்கும் இத்தருணத்தில் ரோகினா மஹ்ரூப்பின் சகோதரர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்ன வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரை வீழ்த்தவே இந்த திட்டம் திருகோணமலையில் அரங்கேறியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -