வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கி முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் நான்கு பேர் பயணித்ததில் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் அதனை செலுத்திச் சென்ற நபரே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த நபர் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எச்.எம்.இர்பான் வயது (34) என்பவர் என பொலிஸாரின் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இவருடன் பயணித்த ஒருவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கான வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
