தலவாக்கலை பி.கேதீஸ்-
தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் 28 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வையொட்டி தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்ட அதிகாரி சரத் ரணவீர தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ச்சியாக அக்கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் அத்தோட்டத்தில் 24 வருடங்கள் சேவையாற்றிய தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அத்தோட்டத்திலுள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் மதிய நேர உணவு வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது தோட்ட உதவி அதிகாரிகள் ஸ்சார சம்பத், ரவிஸ்க லக்ஷான், தோட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
